Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அத்துமீறும் பாகிஸ்தான்.. இந்தியாவின் பதிலடியால் எல்லையில் பதற்றம்..!

இந்திய எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நேற்று  ஜம்மு- காஷ்மீரின் அர்னியா பகுதியில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுத்தது.

Ceasefire Pakistan


இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் நவ்ஷெரா பகுதியில், இன்று காலை ஏழு மணி முதல், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது
இந்தத் தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cease fire Pakistan

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "எல்லை அருகே உள்ள பாவானி, பாபா கோவாரி, கல்சியான் ஆகிய மூன்று கிராமங்களை குறிவைத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள், வேறு பாதுகாப்பான பகுதிக்கு, குடிபெயர்த்தப்பட்டுள்ளனர்" என்றார்


இதற்கிடையே, இந்தத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். பாகிஸ்தான், இந்தியா இடையே, தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால், எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close