Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரதட்சணை கொடுமை: கணவருக்கு ‘தலாக்’ அறிவித்த மனைவி!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், தன் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதால் ‘தலாக்’ செய்வதாக அறிவித்தார்.

தலாக் அறிவித்த மனைவி


’தலாக்’ அறிவிக்கும் முறையை பல்வேறு முறைகளில் கணவர்கள் அறிவித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர், தன்னுடைய கணவரை ‘தலாக்’ செய்வதாக அறிவித்துள்ளார்.


’திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன போதிலும், கணவர் தொடர்ந்து வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி வருகிறார். பெண் குழந்தை பிறந்ததும், கணவரிடமிருந்தும், அவரின் குடும்பத்தாரிடம் இருந்தும் பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இனிமேலும் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தால் ‘தலாக்’ அறிவித்தேன்’ எனக் கூறுகிறார்.


மேலும், சட்டரீதியாகவும் ‘வரதட்சணைக் கொடுமை’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விவாகரத்து கோரப்பட்டுள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் பெண் ‘தலாக்’ அறிவித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆனால், இஸ்லாமிய வழக்கப்படி, ’திருமணத்துக்குப் பின்னர் மனைவி, மக்களை கவனித்துக்கொள்ளாமல் இருப்பவரை பிரிந்து செல்வதற்கான வழக்கம் உள்ளது’ என்றும் அப்பெண் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close