Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் மிகவும் பிஸியான ஏர்போர்ட் எது தெரியுமா?

சில வாரங்களுக்கு முன்னரே உலகின் மிகவும் பிஸியான ஏர்போர்ட் என்ற பெருமையை பெற்றது மும்பை விமான நிலையம்.

மும்பை விமான நிலையம்


ஒரே ஒரு விமான ஓடுதளம் கொண்ட மும்பை சர்வதேச விமான நிலையம் உலகின் மிகவும் பிஸியான விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள காட்விக் விமான நிலையத்தினை பின்னுக்குத்தள்ளி மும்பை விமான நிலையம் தரவரிசைப் பட்டியலில் முன்னுக்கு வந்துள்ளது.


மும்பை விமானப் போக்குவரத்துத்துறைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றபோதும், ஒவ்வொரு நாளும் 65 விநாடிகளுக்கு ஒருமுறை ஒரு விமானம் புறப்படவோ, தரையிறங்கவோ செய்வது சவாலானப் பணி. குறிப்பாக ஒற்றை ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக உள்ளது மும்பை சர்வதேச விமான நிலையத்தின் சவால்.


விமானப் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘2016-17 வரையிலான நிதியாண்டில் மும்பை விமான நிலையம் ஒரு நாளைக்கு 837 விமானங்களைக் கையாண்டுள்ளது. ஆனால் லண்டனின் காட்விக் விமான நிலையம் 757 விமானங்களை ஒரு நாளில் கையாண்டுள்ளது. 
இந்தச் சவாலானப் பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இப்புதிய சாதனையை மும்பை விமான நிலைய அதிகாரிகளும், ஊழியர்களும் கருதுகின்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close