Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

80 வயது மேற்பட்டவர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 80 வயது மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதார்

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் அனைவரும் ஆதார் அட்டைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என அறிவித்துள்ளது மத்திய அரசு.

மத்திய அரசு அறிவித்த ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவு ஜம்மு- காஷ்மீர், மேகாலயா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முழுமையாகப் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய குடியுரிமை பெறாதவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை 1 முதல் மத்திய அரசின் உத்தரவு அமலுக்கு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close