Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!

ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதனால், பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர்

ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அண்மையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இரு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மேலும் உமர் பயாஸ் என்ற இந்திய வீரரும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தால் உயிரிழந்தார். இதையடுத்து பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நவ்ஷோரா என்ற இடத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை, காஷ்மீர் துணை ஆணையாளர் ஷாஹித் சவுதிரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close