Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழில் ட்வீட்... எம்.ஜி.ஆர் மீது பாசம்..! : தமிழக அரசியலை நோக்கிப் பாயும் மோடி!

கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, ஐ.நா சபையின் சார்பில் நடந்த சர்வதேச மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, மோடி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார்.  அவர் தனது பயணத்தை முடித்துவிட்டு, நேற்று இந்தியா திரும்பி விட்டார். இந்தப் பயணத்தின்போது, அவரது செயல்கள் அனைத்தும், தமிழக அரசியலைச் சுற்றியே இருந்ததாக கூறப்படுகிறது.

Modi


இதற்காக, இலங்கை செல்வதற்கு முன்பே மோடி தமிழில் ட்வீட்டி வந்தார். "இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்" என ட்வீட்டை ஆரம்பித்த அவர், இங்கே செல்கிறேன், அங்கே செல்கிறேன் என்று இலங்கைப் பயணம் முழுவதையும், தமிழில் ட்வீட்டி அப்பேட் செய்தார்.


முக்கியமாக, ப்போது, இலங்கை அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மற்றும் தமிழ் தலைவர்ளை சந்தித்துப் பேசினார்.

Modi

"வருகின்ற, ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்பில் இருந்து, வாரணாசிக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா துவங்கும். இதன்மூலம் தமிழ்ச் சகோதர, சகோதரிகள், புத்தருடைய மண்ணுக்கு வரலாம்" என்று மோடி அறிவித்தார். 


குறிப்பாக, மலையகத் தமிழர்கள் மத்தியில் பேசிய மோடி, "தமிழக முதல்வராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மண்ணைச் சேர்ந்தவர். இந்தியாவின் தேசியத் தலைவராக விளங்குகிறார் எம்.ஜி.ஆர். எனவேதான் இந்த மண்ணுக்கும் இந்தியாவுக்கும் ஒரு பந்தம் இருக்கிறது என்றேன்" என்று கூறினார்.


தமிழகத்தில், தற்போது நிலவும் அரசியல் அசாதாரண சூழலுக்கும், மோடிக்கும் சம்பந்தம் உள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், மோடியின் தமிழ் ட்வீட்கள், எம்.ஜி.ஆர் பாசம் ஆகியவை அரசியல் உள்நோக்கம் மிகுந்தவை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close