Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெட்ரோ ரயில் பணிகளில் திருநங்கைகள்! கேரள அரசின் அசத்தல் முயற்சி

கேரளாவில், மெட்ரோ ரயில் பணிகளில் 23 திருநங்கைகள் பணியமர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருநங்கை

திருநங்கைகளுக்காக, கேரள அரசாங்கம் தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனிக் கழிவறை, திருநங்கைகளுக்கான தடகளப் போட்டிகள் என கேரளாவில் திருநங்கைகளின் மேம்பாட்டில், அம்மாநில அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதனிடையே கேரளாவில் புதிதாக தொடங்கவுள்ள மெட்ரோ ரயில் பணிகளில் 23 திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பராமரிப்பு, டிக்கெட் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, அவர்கள் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படவுள்ளது. திருநங்கைகள் மேம்பாட்டுக்காக, அரசு எடுக்கும் இந்நடவடிக்கையைப் பார்த்து, மேலும் பல நிறுவனங்கள் திருநங்கைகளை பணியமர்த்த வேண்டும் என்கிறார் மெட்ரோ ரயில் அதிகாரி ஜார்ஜ்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மேலும் பலர் பணியமர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அரசு சார்ந்த துறையில் அதிகளவிலான திருநங்கைகள் பணியமர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.  
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close