Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயங்கரவாதமும், குண்டர்களின் ராஜ்ஜியமும் நிறைந்த கேரளா: மத்திய அமைச்சர் சாடல்!

மார்க்சிஸ்ட் ஆளும் கேரளாவில் பயங்கரவாதமும், குண்டர்களின் ராஜ்ஜியமும் தான் நிறைந்துள்ளது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கேரள மாநிலத்தைச் சாடியுள்ளார்.

கிரிராஜ் சிங்


சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களுக்கான அமைச்சர் கிரிராஜ், கேரளாவின் குமரகோம் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ஜ. கட்சியினரைப் பார்க்க வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘கேரளாவில் பேச்சுரிமை இல்லை. பயங்கரவாதமும், குண்டர்களின் ராஜ்ஜியமும் தான் இருக்கிறது. சிபிஐ(எம்) ஆட்களால் பா.ஜ.க-வினர் தாக்கப்பட்டுள்ளனர். இதுவெறும் மாநிலப் பிரச்னை அல்ல, ஒட்டுமொத்த நாடும் கவனிக்க வேண்டிய சம்பவம்’ என்றார்.

பா.ஜ.க-வினர் மீது நடந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோட்டயத்தில் நேற்று காலை முதல் மாலை வரையிலான பந்த் அனுசரிக்கப்பட்டது. பா.ஜ.க-வின் சார்பில் இன்று கண்ணூர் மற்றும் மாஹி பகுதிகளில் பந்த் கடைபிடிக்கப்படுகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close