Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#indiashame... மீண்டும் ஒரு கூட்டு பாலியல் பலாத்காரம்... ஹரியானாவில் நிகழ்ந்த கொடூரம்...

ஹரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் பெண் ஒருவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


ஹரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர் காணாமல் போனார். இந்த நிலையில் இன்று அந்தப் பெண்ணின் உடல், முழுவதும் சிதைக்கப்பட்டு சாலை ஓரத்தில் வீசப்பட்டுக் கிடந்தது. உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவரை ஏழு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு கொண்டது தெரிய வந்தது.

அவரது முகம் செங்கலைக் கொண்டு முழுவதுமாக அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட அவர், கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த ஒரு வருட காலமாக ஒருவன் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளான். ஒரு வாரத்துக்கு முன்னர் தனது நண்பர்களுடன் வந்து கொல்லப்பட்ட பெண் வீட்டில் பிரச்னை செய்துள்ளான் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த பெண்ணின் வீட்டார், 'அவர்கள் என் மகளை என்ன செய்திருப்பார்கள் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்றார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close