Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு வழியாக சிவப்பு விளக்கை அகற்றிய கொல்கத்தா இமாம் !

தனது காரில் இருந்த சிவப்பு விளக்கை அகற்ற மறுத்த கொல்கத்தா இமாம் பர்காதி, ஒரு வழியாக விளக்கை அகற்ற சம்மதம் தெரிவித்துள்ளார்.

இமாம் Photo: ANI

பிரதமர், ஜனாதிபதி உள்பட அரசு உயர் அதிகாரிகளின் கார்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து மே 1 முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்தது. தீயணைப்பு துறை, போலீஸ், ராணுவம் மற்றும் ஆம்புலன்ஸ்கள் அவசரகால சேவையின் போது சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், கொல்கத்தாவில் உள்ள இமாம் பர்காதி இந்த அறிவிப்பை ஏற்க மறுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சலுகையை மத்திய அரசு சொல்வதற்காக விட முடியாது. வேண்டுமானால் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் பாதுகாப்பு அம்சங்களை தளர்த்திக் கொள்ளட்டும், நான் சிகப்பு விளக்கை அகற்றுகிறேன்' என்றார். இதற்காக இவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தற்போது தனது காரில் உள்ள சிவப்பு விளக்கை அகற்றியுள்ளார் இமாம் பர்காதி. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் இமாம் பர்காதி.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close