Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்திரா காந்திதான் மிகவும் மதிக்கப்பட்ட பிரதமர்!' - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பளார்

Pranab Mukherjee

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் மகளும், தேசத்தின் முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி பிறந்து நூறு வருடங்கள் ஆகிறது. இதைக் கொண்டாடும் வகையில், காங்கிரஸ் கட்சி டெல்லியில் இந்திரா காந்தி வாழ்க்கை மற்றும் அவர் செய்த பணிகள் குறித்த விரிவான புத்தகம் (India's Indira - A Centennial Tribute) ஒன்றை வெளியிட்டது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்பட காங்கிரஸின் முக்கியமான தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி, ''இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவிலும் 20-ம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க மனிதர்களில் அவர் ஒருவர். அவர் மறைந்த பின்னரும் இன்று வரை ஒரு ஜனநாயக நாட்டின் மிகவும் மதிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதமராக அவர் விளங்குகிறார். நன்கு யோசித்து ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதை அவர் முழு பலம்கொண்டு முன்னெடுத்துச் செல்வார். அவர் அரசியல் வாழ்க்கையில் சந்தித்த மிக மோசமான தருணங்கள் அவரை இன்னும் அதிகமாக செயல்படவைத்தது'' என்று இந்திரா காந்திக்கு புகழாரம் சூட்டினார். 

மேலும், 1984-ம் ஆண்டு இந்திரா காந்தியால் முன்னெடுக்கப்பட்ட 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' பற்றி பிரணாப் பேசும்போது, ''சில நேரங்களில் நாம் எடுக்கும் ஒரு முடிவு, செய்யும் ஒரு செயல் அந்நேரத்தில் மிகவும் முக்கியமாக இருக்கும். ஆனால், வரலாறு அதை அப்படிப் பார்க்காது. அப்போது எடுக்கப்பட்ட முடிவு என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது'' என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close