Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அயோத்தியில் அடுத்த ஆண்டு ராமர் கோயில் கட்டப்படும் : சுப்பிரமணியன் சுவாமி!

’அயோத்தியில் அடுத்த ஆண்டு ராமர் கோயில் கட்டப்படும்’ என நம்புவதாக ராஜ்ய சபா எம்பி,சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

சுப்பிரமணிய சுவாமி

பா.ஜ.க மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்பி.,யுமான சுப்பிரமணியன்சுவாமி, உத்தரகாண்ட்டில் உள்ள டேராடூனுக்கு வருகைதந்தார். அங்கு, ராமர் கோயில்குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில், ’அடுத்த ஆண்டே அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் துவக்கப்படும் என நம்புகிறேன். மேலும், இதுகுறித்து பல்வேறு குழுத் தலைவர்களிடமும் வருகிற ஜூன் 7-ம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளேன்’ என்று கூறினார்.


மேலும் சுவாமி குறிப்பிடுகையில், ‘இது நம்பிக்கையின் அடிப்படையிலான விஷயம். ராமர் பிறந்த இடமான அயோத்தியில், ராமர் கோயில் எழுப்பப்பட வேண்டும். சரயு நதியின் மற்றொரு புறம் மசூதி எழுப்பிக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்தார். கூடுதலாக, வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதத்துக்குள் உச்சநீதிமன்றம் இந்த வழக்குகுறித்த விசாரணையை நிறைவேற்றும் எனவும் தெரிவித்தார்.

ஜம்மு- காஷ்மீர் பிரச்னைகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த சுவாமி, ’ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் சட்ட விதி 370 நீக்கப்பட வேண்டும். முதன்முதலாக இந்தச் சட்ட விதி அமல்படுத்தப்பட்டபோது, அது தற்காலிகமானது என்றே தெரிவிக்கப்பட்டது. இந்த விதியை நீக்க வேண்டும். இதற்கு, நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டுமென்ற விதிகூட கிடையாது’ என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close