Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக மணல் சிற்பம்!

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக மணல் சிற்பம் வடித்துள்ளார், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

மணல்

இந்திய முன்னாள் கப்பல் படை வீரர் குல்பூஷன் ஜாதவ்வை, 'ரா' அமைப்பின் உளவாளி எனக் கைதுசெய்த பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதற்கு, இந்தியாவின் சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், குல்பூஷனின் தண்டனையை ரத்துசெய்யக்கோரி, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையும் நடத்தப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி,  மணல் சிற்பத்தை வடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த நாடு முழுவதும் குல்பூஷனுக்கு ஆதரவு உள்ளது. அதை வெளிப்படுத்தும் நோக்கில்தான் இந்த மணல் சிற்பத்தை வடித்துள்ளேன்' என்றார். இவர், நேற்று இதே கடற்கரையில் அன்னையர் தினத்துக்காக மணல் சிற்பம் வடித்திருந்தார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close