Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குல்பூஷனுக்காக வாதாடும் வழக்கறிஞருக்கு ஒரு ரூபாய் சம்பளம்!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் மீது குற்றம் சாட்டி, கடந்த மார்ச் மாதம் அவரைக் கைது செய்து தூக்குத் தண்டனை விதித்தது பாகிஸ்தான் அரசு.

இந்தியாவின் 'ரா' அமைப்புக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட குல்பூஷனை, 'அவர் கடற்படை வீரர்' என உறுதியளித்து, உளவு பார்த்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டை மறுத்ததோடு, அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது இந்தியா. இந்தியாவின் கோரிக்கையைப் பரிசீலித்த சர்வதேச நீதிமன்றமும், தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு மீதான சர்வதேச விசாரணை நேற்று தொடங்கியது. 

குல்பூஷன் ஜாதவ்

விசாரணையில் இந்தியா சார்பில் வாதாடிய ஹரீஷ் சால்வே, 'ஜாதவ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறு. இந்த வழக்கில் அடிப்படை மனித உரிமைகள் பின்பற்றப்படவில்லை. ஜாதவுக்குத் தகவல் தெரிவிக்காமலேயே, பாகிஸ்தான் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. ஜாதவுக்கு எதிரான ஆதாரங்கள், ஆவணங்கள் எதையும் பாகிஸ்தான் அரசு தரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட உதவிகள் வழங்கவும் பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை' போன்ற பல்வேறு கேள்விகளையும், விமர்சனங்களையும் தனக்கு வழங்கப்பட்ட 90 நிமிட அவகாசத்தில் முன்வைத்தார் ஹரீஷ் சால்வே. 

தவிர, குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை சட்டவிரோதமாக அறிவிக்கவேண்டும். அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்யவேண்டும். அல்லது தண்டனையை ரத்து செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்... போன்ற கோரிக்கைகள் இந்தியா அளித்துள்ள மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில், குல்பூஷன் ஜாதவ் தானாக முன்வந்து இந்தியாவின் உளவாளியாகச் செயல்பட்டதாகவும், யாருடைய நிபந்தனையும் இன்றி இந்த வாக்குமூலத்தை குல்பூஷன் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டதோடு, தூக்கு தண்டனையை உறுதி செய்ய வலியுறுத்தியது பாகிஸ்தான். இந்த வழக்கின் தீர்ப்பு, இனி சர்வதேச நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. 

இவ்வழக்கில், இந்தியா சார்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேவுக்கு அரசியல் அமைப்புச் சட்டப்படி 'ஒரு ரூபாய்தான் சம்பளம்' எனத் தெரிவித்திருக்கிறார், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். தவிர, 'இந்தியக் குடிமகன் என்ற முறையில், குல்பூஷன் ஜாதவைக் காப்பற்றவேண்டியது நமது கடமை. அவரை விடுவிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது' எனவும் தெரிவித்திருக்கிறார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close