Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிபிஐ ரெய்டும் ப.சிதம்பரம் கொடுத்துள்ள விளக்கமும்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றுவருகிறது. இந்தத் திடீர் சோதனை குறித்து ப.சிதம்பரம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Chidambaram
 

சென்னையில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பத்து பேர் கொண்ட சிபிஐ குழு அதிரடி ரெய்டு நடத்திவருகிறது.  இதேபோல டெல்லியிலும், நொய்டாவிலும் சில குறிப்பிட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான எப்.ஐ.பி.பி, தனியார் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக ஒப்புதல் கொடுத்தது தொடர்பாக, சிபிஐ இந்தச் சோதனையை நடத்திவருகிறது.

சிபிஐ ரெய்டுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசு சிபிஐ அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நேரடி அந்நிய முதலீட்டுக்கு  அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் என்பது ஐந்து அமைச்சகங்கள் தொடர்புடையது. என்மீதும் என் மகன்மீதும் அரசியல் காழ்ப்புஉணர்ச்சி காரணமாக மத்திய அரசு அடக்குமுறையை ஏவுகிறது. பா.ஜ.க அரசு என்னை அடக்க நினைத்தாலும், தொடர்ந்து குரல் கொடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close