Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜே.என்.யூ மாணவர் நஜீப் வழக்கு: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி ஜே.என்.யூ மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

நஜீப்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது கடந்தாண்டு காணாமல் போனார். ஏ.பி.வி.பி அமைப்பினருடன் நடந்த மோதலுக்கு பின்னர் அவர் காணாமல் போனார். இதையடுத்து ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.

இதனிடையே நஜீப் வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். நஜீப்பின் தாயார் அளித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளனர். இதையடுத்து  ஜூலை 17-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நஜீப் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், கூகுளில் ஐ.எஸ் அமைப்புப் பற்றி தேடி இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டை டெல்லி போலீஸ் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close