Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதன்முதலாக உச்சத்தைத் தொட்ட நிஃப்டி: வரலாறு காணாத ஏற்றம்!

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது நிஃப்டி. முதன்முறையாக நிஃப்டியின் புள்ளிகள் 9,500 ஆக உயர்ந்துள்ளது பங்குதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்றத்தில் நிஃப்டி

பங்குச்சந்தையில் அன்னிய முதலீடுகளின் வரத்து அதிகரித்திருப்பதால் நிஃப்டி முதன்முறையாக 9500 புள்ளிகளாக நின்று புதிய சாதனை படைத்துள்ளது. வர்த்தக வாரத்தின் துவக்க நாளான நேற்று தேசிய பங்குச்சந்தையின் நிலவரம் உயர்விலேயே இருந்தது. இந்நிலையில் இன்று, உச்சத்திலேயே ஆரம்பித்த பங்குச்சந்தை வர்த்தகம், தற்போது அபாரமாக அதிகரித்துள்ளது. 

வர்த்தகத் தொடக்கத்தில் இருந்ததைவிட 250 புள்ளிகள் ஏற்றம் கண்ட நிஃப்டியின் வளர்ச்சி முதன்முறையாக என்றும் இல்லாத அளவிற்கு 9500 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. தேசியப் பங்குச்சந்தையின் தொடர் உச்சத்தால் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரமாரியாக உயர்ந்துள்ளன.

ஏப்ரல் மாதத்திலிருந்தே இந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடுகளின் வரத்து அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close