Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டு: ட்விட்டரில் எச்சரிக்கும் கெஜ்ரிவால் மனைவி!

அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், தன் கணவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் கபில் மிஷ்ராவை ட்விட்டரில் வெளுத்து வாங்கி வருகிறார்.

'ஆம் ஆத்மி’ கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் மீது சில நாள்களாகவே ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கெஜ்ரிவாலின் மீது ஊழல் புகார் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில், தன் கணவர் மீது வீண் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த வேண்டாமென கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கபில் மிஸ்ராவை எச்சரித்துள்ளார். சுனிதா கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘தவறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்துப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கபில் மிஸ்ரா கூறியிருப்பதாவது, ‘தன் கணவரின் நிலையைக் கண்டு சுனிதா கெஜ்ரிவால் கலக்கமடைந்துள்ளார். அங்கு என்ன நடக்கிறது என அவருக்குத் தெரியாது. ஒரு மனைவியாக அவர் தன் கடமையைச் செய்து வருகிறார். அதனால் அவர் என்னை எவ்வளவு சாடினாலும் நான் திருப்பி எதுவும் பேசப்போவதில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close