Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பினாமி பெயரில் சொத்து... லாலு பிரசாத் வீட்டில் அதிரடி சோதனை!

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பினாமி பெயரில் சொத்துகள் குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனையில் இறங்கியுள்ளனர்.

லாலு

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 1000 கோடி ரூபாய் அளவில் பினாமி பெயரில் சொத்துச் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறையினர் லாலு பிரசாத்தின் மகன்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் இன்று அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். 22 இடங்களில் பினாமி சொத்துகள் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி பி.சி.குப்தாவின் மகன் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 100 அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாட்டுத் தீவின ஊழல் வழக்கில் லாலுவை விசாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று ப.சிதம்பரத்தின் மற்றும் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை நடத்தினர்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close