Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹரியானாவில் 10 வயது குழந்தை பாலியல் வன்புணர்ச்சி... 20 வார கர்ப்பிணியான துயரம்!

ஹரியானாவின் ரோத்தக் பகுதியைச் சேர்ந்த 10 வயது குழந்தையை, அந்தக் குழந்தையின் வளர்ப்புத் தந்தையே (stepfather) பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ள கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அந்தக் குழந்தை, மறுபடி மறுபடி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்தக் குழந்தை தற்போது 20 வார கர்ப்பிணியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, விரைவில் கருக்கலைப்பு செய்யப்பட உள்ளதாக, சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

குழந்தையின் நிலைகுறித்து மருத்துவர்கள், 'அவருக்கு செய்யப்பட்ட சோதனையின்படி, அவர் 20 வார கர்ப்பிணியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து, அவர் 19 வார கர்ப்பிணியா அல்லது 21 வார கர்ப்பிணியா என்று சரியாகக் கூற முடியவில்லை' என்று கூறியுள்ளனர். 

இந்தியாவில், 20 வாரங்களுக்கு மேலான ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தையை வன்புணர்ச்சி செய்த வளர்ப்புத் தந்தை, போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close