Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#3FailedYears: மோடி அரசை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!

இன்று, ட்விட்டரில் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியை விமர்சித்து #3FailedYears என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.

மோடி

2014 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க., ஆட்சியமைத்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த மூன்றாண்டு கால ஆட்சியில், பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பகீர் நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் மேல் பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இதனிடையே, மோடி அரசை விமர்சித்து இன்று ட்விட்டரில் நெட்டிசன்கள் #3FailedYears ட்ரெண்ட் செய்தனர். இதில், மோடியையும் பா.ஜ.க அரசையும் விமர்சித்து மீம்ஸ்களால் மிரட்டித் தள்ளினார்கள், ட்விட்டர்வாசிகள். குறிப்பாக, பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு தீவிரவாதமும் நக்ஸலிசமும் ஒழியும் என மோடி கூறியதைப் பலரும் விமர்சித்தனர். மேலும், மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 'குறிப்பாக, ரான்சம்வேர் வைரஸால் ஏடிஎம்கள் மூடப்படுவதற்கு முன்னரே ஏடிஎம்களை மூடி அசத்தியவர் எங்க தல மோடி' போன்ற மீம்ஸ்களால் திணறியது ட்விட்டர். இதனால் ட்விட்டரே சும்மா அதிருச்சுல.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close