Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மம்தா பானர்ஜி - சோனியா காந்தி சந்திப்பு... யார் அந்த ஜனாதிபதி வேட்பாளர்?

ஜனாதிபதி தேர்தல்குறித்து விவாதிக்க, இன்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார்.

மம்தா

வரும் ஜூலை மாதத்தில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள்குறித்து பேச்சுக்களும் எழத் தொடங்கிவிட்டன. ஆளும் பா.ஜ.க சார்பில் மோகன் பகவத், அத்வானி என சிலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுவருகின்றன. இதனிடையெ பா.ஜ.க அரசுக்கு எதிராக இதரக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று சோனியா காந்தியைச் சந்தித்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி. இதுகுறித்து அவர் கூறுகையில், 'குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு, பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்துவதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை யாரும் உறுதிசெய்யப்படவில்லை' எனக் கூறியுள்ளார். இதையடுத்து, வருமானவரித்துறை சோதனைகுறித்து பதிலளித்த அவர், 'லாலு, அகிலேஷ், சிதம்பரம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அரசியல் காழ்ப்புஉணச்சியின் காரணமாக பா.ஜ.க குறிவைத்துவருகிறது' எனக் கூறியுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close