Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாதுகாப்பு அம்சங்களை ஆய்வுசெய்ய காஷ்மீர் விரைந்தார் அருண் ஜெட்லி!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் தொடர் பதற்றம் காரணமாக, இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் ஆகியோர், எல்லையில் பாதுகாப்புகுறித்து ஆய்வு மேற்கொள்ள காஷ்மீர் விரைந்துள்ளனர்.

அருண் ஜெட்லி


இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவிவருகிறது. எல்லையில் தினமும் ஊடுருவல், துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடந்தேறிவருகின்றன. இந்தப் பதற்றமான சூழ்நிலையில், எந்நேரமும் இந்தியா எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எல்லையில் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள, நிதி அமைச்சரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான அருண் ஜெட்லி, தற்போது காஷ்மீர் சென்றுள்ளார்.


மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரிடமிருந்து கூடுதல் பொறுப்புகளை எடுத்துள்ள அருண் ஜெட்லி, பாதுகாப்பு அமைச்சராக முதன்முறையாக காஷ்மீர் பயணிக்கிறார். களத்தில் பணியாற்றும் போர் அதிகாரிகளுடன் எல்லைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

 ராணுவத் தளபதி பிபின் ராவத்துடன் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் காஷ்மீரில் நடைபெறும் தேடுதல் வேட்டை குறித்து இருவரும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து திடீர் தாக்குதல் அல்லது ஊடுருவல்கள் தொடர்ந்தால், மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கைகளை அமைச்சர் விவாதிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close