Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ‘குளோபல் கேம் சேஞ்சர்’ பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானி

4ஜி நெட்வொர்க் சேவை மூலம் தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை புதிய வெற்றியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தனது தொழிற்சாலைகள் மூலம் பலரது வாழ்வையும் மாற்றி அமைத்ததற்காக முகேஷ் அம்பானிக்கு ‘குளோபல் கேம் சேஞ்சர்’ விருதுப் பட்டியலில் முதலிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

’குளோபல் கேம் சேஞ்சர்ஸ்’ பட்டியல் என்பது உலகிலுள்ள முன்னணி தொழிலதிபர்களில் துணிச்சல் மிகுந்தவர்கள், சிறந்த நிர்வாகிகள், தங்களது தொழில் திறமையால் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களின் பட்டியல் ஆகும். இப்பட்டியலில் அனைத்திலும் சிறந்து விளங்கி முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் 25 பேர் கொண்ட இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா போன்ற நாடுகளைச் சேர்ந்த முன்னணித் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளானர்.

4ஜி அலைக்கற்றை போன்ற தொலைத்தொடர்பு துறையில் மட்டுமல்லாது பெட்ரோல், எரிவாயு, உணவகத்தொழில், ஆடைகள் எனப் பல தொழில்களிலும் முன்னணியில் உள்ளார். இதுபோன்ற சிறந்த தொழிலதிபர்களுக்கான பட்டியலைத்தான் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close