Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குல்பூஷன் ஜாதவின் வழக்கில் நாளை தீர்ப்பு!

பாகிஸ்தானால் மரண தண்டனை அறிவிக்கப்பட்டு தற்போது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவின் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார் குல்பூஷன் ஜாதவ். கைது செய்யப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. இருப்பினும் இந்தத் தீர்ப்பை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவினை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை வரும் 15-ம் தேதி துவங்கும் என்று தெரிவித்தது. அதன்படி, மொத்தம் இரண்டு கட்டங்களாக விசாரணை நடைபெற்றது. இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையின் தீர்ப்பு நாளை, மே 18-ம் தேதி வழங்கப்படும் என ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close