Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் சிறிய குழந்தைக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை!

12 அங்குலத்தில் பிறந்த உலகின் மிகச் சிறிய குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

குழந்தை

உதய்பூரைச் சேர்ந்த எஸ்.பி.ஜெயின் என்பவருக்கு 470 கிராமில் 12 அங்குலமுடைய குழந்தை பிறந்தது. 28 வாரங்களில் பிறந்த இந்த குழந்தையின் உடல் வளர்ச்சி முழுமையடையாமல் இருந்தது. மேலும், குழந்தைக்கு இருதயக் கோளாறு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிறந்து 15 நாள்களே ஆன உலகின் மிகச் சிறிய குழந்தையாக கருதப்படும் இக்குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கீதாஞ்சலி மற்றும் ஜீவாந்தா மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். தற்போது, குழந்தை நலமாக இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பின்னர் குழந்தையின் எடை 600 கிராமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், 'இனி தான் எங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டவுள்ளோம். எங்கள் குழந்தை உயிர் பிழைத்தது மிகப்பெரிய அதிசயம்' என கூறியுள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close