Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடிக்கு எதிரான கூட்டணியில் இணையும் அரவிந்த் கெஜ்ரிவால்!

குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியில் இணையவிருக்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால்.

மம்தா

ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக இருக்கிறது. காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், ராஷ்ட்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஆம் ஆத்மியும் இந்தக் கூட்டணியில் இணைய உள்ளது.

இன்று, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்தார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் கெஜ்ரிவாலுடன் இணைந்து செயல்படப்போவதாக மம்தா அறிவித்தார். இதனிடையே, நேற்று மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். மதச் சார்பற்ற பொதுவான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பேச்சுவார்த்தை நடப்பதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close