Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாடுகளுக்குப் பறக்கத் தயாராகிறார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, மே 29 ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 

மோடி

பிரதமர் நரேந்திர மோடி, மே கடைசியில் மூன்று நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ரஷ்யா, ஜெர்மன் , ஸ்பெய்ன் ஆகிய மூன்று நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச உள்ளார். சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் முதலீடுகள்குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கின் பொருளாதாரக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்வார். அடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்தித்துப் பேச உள்ளார். 2015ஆம் ஆண்டு, முதன்முறையாக பிரதமர் மோடி ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது 2-வது முறையாக ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close