Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின்னணு எந்திரத்துக்கு எதிரான குற்றச்சாட்டு: தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சம்மன்

ec

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டி, அதை நிரூபித்தது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு, தேர்தல் ஆணையத்துக்கு வந்தது. தொடர்ந்து மின்னணு எந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் நீதி ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, வரும் 19-ம் தேதி கூடுகிறது.

இந்த கூட்டத்தில், தேர்தல் சீர்திருத்தம்குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில், தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேரில் ஆஜராகி, உரிய விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, 'தேர்தலில் பழைய வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படாது. ஆனால், மின்னணு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு வரும் வசதி, இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும்', எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close