Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே மரணமடைந்தார்..!

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, உடல்நலக் குறைவால் திடீரென காலமானார். 


மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு வயது 60. மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்திய அமைச்சராக மோடி அமைச்சரவையில் செயல்பட்டுவந்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்  தீவிரமாக நடைபெற்றபோது,  அது தொடர்பான கோரிக்கைகளை அனில் மாதவ் தவேயிடம் தமிழக அரசு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, அனில் தவே குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கலில், 'அனில் மாதவ் தவேயின் மரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நேற்று மாலைகூட அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர், சுற்றுச்சுழலைக் காப்பதில் தனிக் கவனம் செலுத்தியவர்' என்று குறிப்பிட்டிருந்தார். 

அனில் மாதவ் தவேவின் இறப்புக்கு, தி.மு.க மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், 'அனில் மாதவ் தவே நல்ல நண்பர். அவருடைய இறப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் மிகவும் எளிமையானவர், சுற்றுச்சூழலில்  மிகுந்த ஆர்வம்கொண்டவர்' என்று பதிவிட்டுள்ளார். 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close