Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக ரயில் நிலையங்களின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள பட்டியல்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள தூய்மையான ரயில்நிலையங்கள் பட்டியலில், முதல் 25 இடங்களில் தமிழக ரயில் நிலையம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.

cleanliness ranking
 

இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் தூய்மையை அடிப்படையாகவைத்து தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தரக் கவுன்சில் இந்த ஆய்வை மேற்கொண்டது. ரயில் நிலையங்களில் உள்ள சுத்தமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குப்பைத்தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைவைத்து இந்த தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இந்தப் பட்டியலை நேற்று வெளியிட்டார்.


தூய்மையான ரயில் நிலையங்களின் தர வரிசைப் பட்டியலில், விசாகப்பட்டினம் ரயில் நிலையம் முதல் இடம் பிடித்துள்ளது.  இரண்டாம் இடத்தில் செகந்திராபாத்தும் மூன்றாம் இடத்தில்  ஜம்மு ரயில் நிலையமும் உள்ளது. டெல்லி ரயில் நிலையம், 39-வது இடத்தில் உள்ளது. முதல் 25 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றுகூட  இடம்பெறவில்லை. ஆனால், கும்பகோணம் 40-வது இடத்திலும் கோவில்பட்டி 41-வது இடத்திலும் மேட்டுப்பாளையம் 42-வது இடத்திலும் சேலம் 43-வது இடத்திலும் சென்னை 184-வது இடத்திலும் உள்ளன.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close