Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னைத் துறைமுகத்துக்கு வந்த ஆஸ்திரேலியக் கப்பலுக்கு அசத்தல் வரவேற்பு!

ஆஸ்திரேலிய நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 'ஓஷன் ஷீல்டு' கப்பல், சென்னை துறைமுகம் வந்தடைந்தது. 


இந்தியக் கடலோரக் காவல்படையினரும் மற்ற வெளிநாட்டுக் கடற்படையினரும் அவ்வப்போது கலந்துரையாடலில் ஈடுபடுவது வழக்கம். அந்தக் கலந்துரையாடலில், தொழில்நுட்பப்  பரிமாற்றம், தகவல்கள் பறிமாற்றம் உள்ளிட்டவை பற்றி விவாதித்துக்கொள்ளப்படும். அதன்படி, ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 'ஓஷன் ஷீல்டு' என்ற கப்பல், இன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. நடுக்கடலில், ஆபத்துக் காலத்தில் உதவும் வகையில் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல், 110 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும்கொண்டது. ஒரு மணி நேரத்தில், 16 கடல் மைல் வேகம் செல்லும் இந்தக் கப்பல், 8,500 டன் எடை கொண்டது. மலேசிய விமானம் காணாமல்போன சமயத்தில், தேடுதல் பணியில் ஈடுபட்ட கப்பல்களில்  இதுவும் ஒன்று. தற்போது சென்னை வந்துள்ள இந்தக் கப்பல், சனிக்கிழமை வரை இருக்கும்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close