Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டார்ட்-அப்பில் வேலை வேண்டுமா?... உங்களுக்காக வந்துவிட்டது நாஸ்காமின் 'ஸ்டார்ட்அப் ஜாப்ஸ்' ஆப்!

நாஸ்காம் அமைப்பு புதிதாக, '10,000 ஸ்டார்ட் அப்' என்று முன்னெடுப்பின் மூலம், 'ஸ்டார்ட்அப் ஜாப்ஸ்' ஆப் என்ற புதிய வகை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் மூலம், நாட்டில் இருக்கும் முன்னணி ஸ்டார்ட்-அப்கள், அவர்களின் வேலை வாய்ப்பு பற்றி போஸ்ட் செய்வர். வேலை தேடுபவர்கள் குறிப்பிட்ட ஸ்டார்ட்-அப்பில் வேலைக்கு அப்ளை செய்வதற்கு, 'ஸ்டார் அப் ஜாப்ஸ்' ஆப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், தங்களின் வீடியோ ரெஸ்யூமை அதில் அப்லோட் செய்து அப்ளை செய்ய வேண்டும். 

இது குறித்து நாஸ்காம் தரப்பு, 'இந்திய அளவில் இருக்கும் 10,000 முன்னணி ஸ்டார்ட் அப்களை ஒரு தளத்தில் கொண்டு வருவதுதான் எங்கள் திட்டம். இதன் மூலம் திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.' என்று கூறுகிறது.

நாஸ்காம் தரப்பு மேலும், 'தற்போது ஐ.டி நிறுவனங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு திறனை வளர்ப்பதற்கு ஒரு தனித் திட்டம் உள்ளது. அவர்களுக்கான திறனை வளர்த்தெடுப்பதன் மூலம், 'ஸ்டார்ட் அப் ஜாப்ஸ்' போன்ற மாற்றுத் தளங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close