Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெரு நாய்களை அடித்துக் கொன்ற ராணுவ அதிகாரி!

மூன்று தெரு நாய்களை அடித்துக் கொன்ற ராணுவ அதிகாரி மனிஷ் தாபா மீது, ராணுவத் தலைமை அதிகாரி பிபின் ராவத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாய்கள்

டேராடுன்னில் சில தினங்களுக்கு முன்னர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மனிஷ் தாபா மாலை நேரத்தில் தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது  அங்கிருந்த தெரு நாய்கள் அவரது நாயைப் பார்த்து குரைத்ததால், 5 தெரு நாய்கள்  மீது அவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இரும்புக் கம்பியால் அவர் தாக்கியதில் மூன்று நாய்கள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளன. மேலும் இரண்டு நாய்கள் படுகாயமடைந்தன. அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விலங்குகள் நல ஆர்வலர்களின் தரப்பில் ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத்திடமும் முறையிடப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரி மனிஷ் தாபா கூறுகையில், தற்காப்புக்காகவே நாய்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளார். இதையடுத்து மனிஷ் தாபா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் நாய்கள் பிரியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close