Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கு பழங்குடி இன பெண் ஜனாதிபதி ஆகிறாரா?

ஜனாதிபதி

ந்தியக் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பணிக்காலம் வரும் ஜூலை 25-ம் தேதி  நிறைவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து,  அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள்  நடைபெற்று வருகின்றன. பா.ஜ.கவின் மூத்த தலைவர் அத்வானி முதல் சுஷ்மா ஸ்வராஜ் வரை பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தப் பட்டியலில் புதிய திருப்பமாக இன்னொருவர் பெயரும் அடிபடுகிறது. அவர்தான் தற்போது  ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் திரெளபதி முர்மு! 

திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால்,  இந்தியாவிலேயே பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராக இருப்பார். இவரது, 20 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர், சிறந்த சட்டமன்ற உறுப்பினர்  போன்ற பல சாதனைகளுக்கு உரியவர். 

ஒடிசா மாநிலத்திலுள்ள உபர்பேடா என்ற குக்கிராமத்தில், கடந்த 1958-ம் ஆண்டு பிறந்தார் திரெளபதி.  மின்சாரம், சாலை வசதி என எந்தவிதமான அடிப்படை வசதிகளே இல்லாத கிராமம் அது. திரெளபதியின் தந்தை  பிரங்ச்சி நாராயண்  டுடூ (Biranchi Narayan Tudu) முற்போக்கு சிந்தனையாளர்.  தனது மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற இவரின்  நோக்கம்தான், பின்னாளில் திரெளபதி ஓர் அரசியல் தலைவராக உயர்வதற்கு அடித்தளம்  போட்டது.

புவனேஸ்வர் நகரிலுள்ள ராம தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்ற திரெளபதி, அங்குள்ள ஒரு கல்லூரியில் துணைப் பேராசிரியராக  பணியாற்றியிருக்கிறார்.  அதன்பிறகு கடந்த 1997ஆம் ஆண்டு,  ராய்ராங்ன்பூர்  தொகுதியின் கவுன்சிலராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான ‘நில்கந்தா விருது’ (Nilkandha Award) பெற்றிருக்கிறார். 

கடந்த 2002 முதல் 2004 வரை, ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் தலைமையிலான  பா.ஜ.க அரசில்,  வணிகம் மற்றும் போக்குவரத்து, மீனவ மற்றும்  கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் அமைச்சராக  பதவி வகித்திருக்கிறார்.

அரசியல் வாழ்வில் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறார் திரெளபதி. இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்றபோது அளித்த பேட்டியில், “நான் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறேன். என்னுடைய கணவரையும்,  இரண்டு மகன்களையும் இழந்திருக்கிறேன். அப்போது நிலை குலைந்து போயிருக்கிறேன். ஆனால், மக்களுக்கு சேவை செய்வதற்கான  வலிமையை கடவுள் எனக்கு அளித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார். திரெளபதி தற்போது ஆளுநர் மாளிகையில் தனியாக வசிக்கிறார்.

ஒடிசா மாநிலத்திலுள்ள மயூர்பஞ்சு மாவட்டத்துக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக, ஏழு வருடங்கள் பதவி வகித்திருக்கிறார். ஆனால், இன்றைய அரசியல் சூழலில், குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருப்பவருக்கு நெருக்கடிகளுக்கு பஞ்சமில்லை.  இன்றைய சூழலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுமீது பெரும்பாலான மாநிலங்கள்  அதிருப்தியில் இருக்கின்றன. 

இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கவும், மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய அதே நேரத்தில் அதிக  சர்ச்சைகள்  இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் பா.ஜ.க அரசு  தீவிரமான தேடலில் உள்ளது. அதற்கு ஏற்றவராக திரெளபதி முர்மு இருக்கும் பட்சத்தில், பா.ஜ.க அரசு இவரை அந்தப் பதவிக்கு தேர்வு செய்யும் சாத்தியங்கள் இருக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close