Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் மல்லையாவின் 100 கோடி ரூபாய் சொகுசு பங்களா பறிமுதல் ... அமலாக்கத் துறை அதிரடி!

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொகுசு பங்களாவை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

மல்லையா

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுவிட்டு அதைத் திருப்பி செலுத்தாமல் இந்தியாவைவிட்டு லண்டன் சென்று தங்கியுள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவரை இந்தியா கொண்டுவர இந்திய அரசு தரப்பில் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அண்மையில் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக கோவாவில் உள்ள சொகுசு பங்களா ஏலம் விடப்பட்டது.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள மற்றொரு சொகுசு பங்களாவை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அலிபாக் கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த பங்களா விஜய் மல்லையா நிர்வகித்து வந்த மண்ட்வா நிறுவனத்துக்குச் சொந்தமானது. 25 கோடி ரூபாய்க்கு இந்த பங்களாவின் மதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதன் மதிப்பு தற்போது 100 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close