Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியைச் சந்தித்துப் பேசினார் காஷ்மீர் துணை முதல்வர்!

காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல்சிங், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார். காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மெகபூபா முப்தி உள்ளார். துணை முதல்வராக பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்மல்சிங் பதவி வகிக்கிறார்.

மோடி - நிர்மல் சிங்

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதி புர்கான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள், பிரிவினைவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாகத் தற்போது காஷ்மீரில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இந்தச் சூழலில்,  துணை முதல்வர் நிர்மல்சிங், பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது காஷ்மீர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஆலோசனை நடத்தினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close