Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சி.பி.ஐ ரெய்டில் சிக்கிய கார்த்தி சிதம்பரம், லண்டன் பறந்தார்!

2007 ஆம் ஆண்டு மும்பையில் இருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், மொரீஷியஸ் உட்பட வெளிநாடுகளில் இருக்கும் மூன்று நிறுவனங்களிடமிருந்து ரூ.305 கோடி நிதி பெற்றது. அதை ரூ.4.62 கோடியாகக் குறைத்துக் காட்டியதாக கார்த்தி சிதம்பரம் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் மீது டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அதன் அலுவலகம் உட்பட எட்டு இடங்களில் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்தினர்.

கார்த்தி சிதம்பரம்

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் தனது நண்பர்கள் சிலருடன் திடீரென லண்டன் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இன்று அதிகாலையில், அவர் தனது நண்பர்களுடன் சென்னையில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். 'கார்த்தி சிதம்பரத்தின் லண்டன் பயணம் ஏற்கெனவே திட்டமிட்டதுதான். லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வரும் 29-ம் தேதி இந்தியா வந்துவிடுவார்' எனத் தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close