Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அறுவைசிகிச்சையின்போது ஆபாசமாக போட்டோ எடுத்தனர்..! மருத்துவர்கள் மீது பெண் புகார்..!

மும்பையில், அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், தன்னை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்ததாக, பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மும்பை மாவட்டம், பிவாண்டி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில், பெண் ஒருவர் வயிற்றுவலியின் காரணமாக சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அவருக்கு, அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார். அதனால் அந்தப் பெண், அறுவை சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அறுவைசிகிச்சை செய்தபோது நடந்த சம்பவம் குறித்து, சிகிச்சை எடுத்துக் கொண்ட அந்தப் பெண், பிவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், 'அறுவைசிகிச்சையின்போது எனக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. அதனால், என்னுடைய உடல் மரத்துப்போய் இருந்தது. ஆனால் நான், சுயநினைவில்தான் இருந்தேன். அப்போது, எனக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்கள், சிகிச்சைக்குத் தேவையில்லாத என்னுடைய பாகங்களைத் தொட்டனர். மேலும், என் முழு உடலையும் நிர்வாணப்படுத்தியிருந்தனர். சிகிச்சைக்குப் பிறகு, நிர்வாணப்படுத்தப்பட்ட உடலை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்' என்று இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியர் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, மூன்று பேர் மீதும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் பிவாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close