Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரகாண்ட்டில் கடும் நிலச்சரிவு : 15,000 சுற்றுலாப் பயணிகள் தவிப்பு!

உத்தரகாண்ட்டில், கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 


உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ஹதி பர்வட் என்ற பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில், சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர், பத்ரிநாத்துக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால், பத்ரிநாத் யாத்திரையும் தடைபட்டுள்ளது.


இதனால், ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சுமார் 60 மீட்டர் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மக்களை மீட்பதற்காக 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன.


குறிப்பாக, பத்ரிநாத்திலுள்ள சிதைபொருள்களை அகற்றுவதற்கு, குறைந்தது இரண்டு நாள்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close