Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாக்குப்பதிவு இயந்திர புகார் : ஜூன் 3-ம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தின் ஓப்பன் சேலஞ்ச்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டி வந்தது. இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், டெல்லி சட்டப்பேரவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று ஆம்ஆத்மி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் நிரூபித்தார்.

Election Commission


இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, தேர்தல் ஆணையத்துக்கு வந்தது. இதையடுத்து கடந்த 12-ம் தேதி, தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது.  


இந்நிலையில்,  இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நஜிம் ஜைதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், "வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என ஆதாரபூர்வ புகார் எதுவும் வரவில்லை. தேர்தலில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, இனி வரும் தேர்தல்களில் ஒப்புகை சீட்டுவாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்து வைக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது.

CEC


வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என பகிரங்கமாக அறிவித்துள்ளவர்கள், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. சிப்பை மாற்ற முடியாத  அளவுக்கு மின்னணு இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முடிந்தால் ஹேக் செய்யுங்கள், என்ற அரசியல் கட்சிகளுக்கான ஓப்பன் சேலஞ்ச் நிகழ்வு வருகின்ற ஜூன் 3-ம் தேதி முதல் தொடங்குகிறது.


இதில், அங்கீகாரம் பெற்ற தேசிய மற்றும் மாநில கட்சிகள் பங்கேற்கலாம்.  ஒரு கட்சியில் இருந்து மூன்று நபர்களை பரிந்துரைக்கலாம். கட்சி மற்றும் கலந்து கொள்பவர்கள் விவரங்களை வருகின்ற, 26-ம் தேதி, மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close