Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்லைப்பாதுகாப்பு வளர்ச்சிக்காக ரூ.1100 கோடி! - ராஜ்நாத் அறிவிப்பு

எல்லைப் பாதுகாப்பு பகுதிகள் வளர்ச்சி பணிகளுக்காக 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு ரூ.1100 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். 

ராஜ்நாத் சிங்

எல்லைப் பாதுகாப்புப் பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து சிக்கிம் மாநிலம் காங்டாங்கில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அதாவது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தாலும் இருநாடுகளுக்கும் இடையே சீரான உறவுமுறையைப் பின்பற்றி வருகிறோம். எல்லைப்பாதுகாப்புப் பகுதியில் மக்களுக்குக் கல்வி, சுகாதாரம், மருத்துவம், மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை அந்தந்த மாநிலங்கள் அளிக்க வேண்டும். அதற்காகக் கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.990 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஏற்கனவே செய்துள்ள வசதிகளை விட 2017-2018-ம் ஆண்டில் மக்களுக்கு அதிக வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதால் மத்திய அரசு ரூ.1100 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close