Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மோடி ஆட்சியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! - நிதித்துறை இணை அமைச்சர்

மோடி ஆட்சியின் கீழ், கடந்த மூன்றாண்டுகளில்  வரி கொடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

அர்ஜுன் ராம் மேக்வால்

தொழில் முனைவோர் அகில இந்திய அமைப்பு ஒன்று நடத்திய கூட்டத்தில் பங்கேற்க வரும்போது செய்தியாளர்களிடையே அவர் உரையாடினார். அப்போது அவர்,  'கடந்த மூன்றாண்டுகளில் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு வலுவான அடித்தளம் இட்டதால் பொருளாதார நடவடிக்கைகள் விரிவுபட்டுள்ளன. நிதி விஷயங்களில் அடித்தட்டு மக்களையும் உள்ளடக்கும் நோக்கில் ஜன் தன் கணக்குகள் முதல் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வரையிலும், பண மதிப்பு நீக்க நடவடிக்கை முதல் டிஜிட்டல் பரிமாற்றங்கள் வரையிலும் பெரிய சீர்த்திருத்தங்களாக முன்னெடுக்கப்பட்டன. கடந்த மூன்றாண்டுகளில் 23 சதவீத வரை பரவியிருந்த நிழல் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். நிழல் பொருளாதாரம் கட்டுப்படுத்தப்பட்டதால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close