Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாலையில் அடிபட்டவரை காப்பாற்றிய அமைச்சர்... உத்தரப்பிரதேசத்தில் நெகிழ்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில், சாலையில் அடிபட்ட ஒருவரை அமைச்சர், மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில்,  ஒருவர் சாலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் இருந்தார். அங்கு ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து, பி.ஜே.பி அமைச்சர் மொஹ்சின் ராசா, அந்த வழியே லக்னோவின் சஹீத் பாத் என்ற பகுதியைக் கடக்க முயன்றார். அப்போது, அடிபட்டவரைக் கண்ட அமைச்சர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தன்னுடைய வாகனத்திலேயே, மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை அனுமதித்துள்ளார்.

UP Minister Mohsin Raza


இதைத்தொடர்ந்து, அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சரின் இந்த செயல்பாடுக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close