Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியில் இன்று அகில இந்திய விவசாயிகள் கூட்டம்: அய்யாக்கண்ணு பங்கேற்கிறார்!

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில், அகில இந்திய விவசாயிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. தமிழகத்திலிருந்து அய்யாக்கண்ணு தலைமையில், 15 விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளனர்.

அய்யாக்கண்ணு

விவசாயிகளின் கோரிக்கைகளை, அரசிடன் வலியுறுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க, இந்தியாவிலுள்ள 28 மாநில விவசாயிகளும் இன்று ஜந்தர் மந்தர் பகுதியில் கூடுகின்றனர். தமிழகத்திலிருந்து 15 விவசாயிகள் உட்பட 300 விவசாயிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

விவசாயிகளின் வேண்டுகோள்களை நிறைவேற்ற, பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதா? அல்லது மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் அஹிம்சை வழியில் போராடலாமா? என்பது குறித்து ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வரும் விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து ஆலோசிப்பர் எனக் கூறப்படுகிறது.

விவசாயிகள் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, நதிகள் அமைக்க எனப் பல முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 14 முதல் ஏப்ரல் 23 வரை, டெல்லியில் நடந்த தமிழக விவசாயிகளின் போராட்டம், தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close