Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முத்தலாக் முறைக்கு முடிவு கட்ட அரசு தயார்'- மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு பளீச்..!

வெங்கையா நாயுடு

'தேவைப்பட்டால் முத்தலாக் முறையைத் தடுக்க தே.ஜ. கூட்டணி உரிய சட்டத்தைக் கொண்டு வரத் தயாராக உள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு. 

முத்தலாக்கு முறைக்கு எதிராக பலரும் தொடர்ந்து வழக்குகள் பதிய, அதுகுறித்த வழக்குகளை மொத்தமாக எடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு அளிக்கப்படவில்லை. இருந்தாலும், முத்தலாக் முறையில் சாதகமான தீர்ப்பு வராத பட்சத்தில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பூடகமாக தெரிவித்துள்ளது. 

இதையொட்டி முத்தலாக் குறித்து வெங்கைய நாயுடு, 'முத்தலாக் விவகாரத்தைப் பொறுத்தவரை எங்கள் முடிவைப் பற்றி நாங்கள் மிகத் தெளிவாகக் கூறிவிட்டோம். தேவைப்பட்டால், முத்தலாக் முறைக்கு எதிராக கண்டிப்பாக சட்டத்தைக் கொண்டு வருவோம். முஸ்லிம் சமூகத்தினரே முத்தலாக் முறையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்களைப் போல முஸ்லிம்களும் சமூகக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close