Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மன் கி பாத்' பாணியில் 'ஜன் கி பாத்' : எதற்காகத் தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், 'மன் கி பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சிமூலம் மக்களிடம் உரையாற்றிவருகிறார் மோடி. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது முதல், இது தொடர்கிறது. இந்த நிலையில், 'மன் கி பாத்' பாணியில், தற்போது 'ஜன் கி பாத்' என்ற ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளனர். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

Modi


இதையடுத்து, வரும் 26 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களைச் சந்தித்து, பி.ஜே.பி ஆட்சி பற்றிக் கருத்து கேட்க உள்ளார்கள், பி.ஜே.பி தலைவர்கள். இதற்குத்தான் 'ஜன் கி பாத்' என்று பெயரிட்டுள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பி.ஜே.பி முதல்வர்கள் உட்பட 450-க்கும் மேற்பட்டோர், நாடு முழுவதும் சென்று கருத்து கேட்க உள்ளனர்.


முக்கியமாக, ஒவ்வொருவரும் தங்களது சொந்த மாநிலம் அல்லாத பிற மாநிலங்களுக்குச் சென்று கருத்து கேட்க உள்ளனர். அதன்படி மோடி கௌஹாத்தியிலும், அமித் ஷா கேரளாவிலும் கருத்து கேட்க உள்ளனர்.  பி.ஜே.பி முதல்வர்கள் பெரும்பாலும், பி.ஜே.பி ஆட்சியமைக்காத மாநிலங்களில் கருத்து கேட்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close