Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியில் `பாதயாத்திரை' தொடங்கும் நோபல் பரிசுபெற்ற சமூக ஆர்வலர்!


நோபல் பரிசுபெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, 'குழந்தைகளைக் காப்போம்; பாரதத்தைக் காப்போம்' என்ற கோஷத்தை முன்வைத்து, நாடு முழுவதும் பாதயாத்திரை ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரையை, கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லி மாநகரில் முடிக்க இருக்கிறார். அதாவது, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை, தீபாவளி அன்று முடிக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

யாத்திரை


கைலாஷ் சத்யார்த்தி கூறுகையில், 'பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இது மிகவும் கவலையளிக்கிறது. இந்த யாத்திரையின்போது, ஒரு கோடி பேரிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி பெறப்படும். உலகின் மிகப் பெரிய போராட்டமாக இந்த யாத்திரை விளங்கும்' என அறிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close