Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.10 கோடி மோசடிப் புகாரில் சிக்கிய கெஜ்ரிவால் உறவினர் வீட்டில் ரெய்டு..!

கோப்புப்படம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவித்துவருகிறார். அவரது நெருங்கிய உறவினரான சுரேந்தர் குமார் பன்சால் மீது 10 கோடி ரூபாய் மோசடிப் புகார் எழுந்தது. அவர், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியைச் செய்தபோது,  பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் பல்வேறு நிறுவனங்களின் பெயரால் போலி பில்களை அளித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக, தொண்டு நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் பேரில், மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சுரேந்தர்குமார் பன்சால், கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், 22 ஆம் தேதி இரவு, அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை மூத்த அதிகாரிகளான பவன் குமார், கமல்குமார் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகளில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close