Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்: முக்கியக் கட்சிகளுடன் சோனியா இன்று ஆலோசனை!

ஜனாதிபதி வேட்பாளர்குறித்து இறுதி முடிவு செய்வதற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா தலைமையில், முக்கியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

சோனியா காந்தி


வரும் ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு எதிராக, பொது வேட்பாளரை நிறுத்துவதென எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி, மம்தா பானர்ஜி போன்ற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், சோனியா தலைமையில் ஒன்றிணைந்து, பொது வேட்பாளரை நிறுத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சோனியா காந்தி முக்கிய எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மதிய விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சோனியா காந்தி, சரத் பவாரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க விரும்பினார். ஆனால் சரத் பவார் மறுத்ததை அடுத்து, தற்போது முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை நியமிக்க ஆலோசனைசெய்கின்றனர். மம்தா பானர்ஜி, மகாத்மாவின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தியை முன்னிறுத்துகிறார். அனைத்துக் கட்சிகளுடனான இன்றைய ஆலோசனைக்குப் பின்னர், ஆளும்கட்சிக்கு எதிரான பொது ஜனாதிபதி வேட்பாளர் நியமிப்பதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close